இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை- ரில்வின் சில்வா
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இல்லை என, ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இல்லை என, ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குள் அதிருப்தி அலை உருவாகி வருவதாகவும், இதனால் சிலர் பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம் என்றும் கொழும்பு சிங்கள வாரஇதழ் ஒன்றின் அரசியல் பத்தியில் கூறப்பட்டுள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து, ஆளும் தேசிய மக்கள் சக்தி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என்று, தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் அமைச்சர் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அமைச்சர் பதவியில் தொடர்வார் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், அவர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அமுல் நிறுவனத்துடனான உடன்பாட்டை புதுப்பிக்கும் திட்டம் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிராமப்புற செயற்பாட்டாளர்களின் கடுமையான தலையீடுகளால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா கிராம அதிகாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் சுமித் கொடிகார குற்றம்சாட்டியுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக பிரிவின் குழுவொன்று சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது சிறிலங்காவின் 80வது வரவு செலவுத் திட்டம் ஆகும்.