இன்று வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கிறார் அனுர
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது சிறிலங்காவின் 80வது வரவு செலவுத் திட்டம் ஆகும்.
நிதியமைச்சர் என்ற வகையில், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஒதுக்கீட்டு மசோதாவின் இரண்டாவது வாசிப்பாக, நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்துவார்.
ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் முதல் வாசிப்பு கடந்த செப்ரெம்பர் 26 ஆம திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நாளைதொடங்கும்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்திற்கு மொத்தம் ஆறு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.
குழு நிலை விவாதம் நொவம்பர் 15 முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் நடைபெற்ற பின்னர், மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும்.
