குமார ஜயகொடி மீது எந்த நடவடிக்கையும் இல்லை – அமைச்சராக தொடருவார்
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் அமைச்சர் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அமைச்சர் பதவியில் தொடர்வார் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் இதுபற்றிக் கருத்து வெளியிட்ட அவர்,
குமார ஜயகொடி தற்போதைய பதவியில் தொடர்ந்து பணியாற்றுவார். அரச உர நிறுவனத்தில் ஜயகொடி பணியாற்றிய காலத்தில் எழுந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கே அது.
கொள்முதல் நடைமுறைகளை மீறியதாகக் கூறப்படும் இந்த வழக்கு, ஜயகொடி அரசாங்க அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் நிகழ்ந்தது.
இந்த வழக்கு தற்போதைய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டது என்பதால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டதாக எந்தக் குற்றச்சாட்டையும் கூற முடியாது என்று தெரிவித்தார்.
