மேலும்

Tag Archives: அமெரிக்கா

ஜெனிவாவில் களம் இறங்குகிறார் அமெரிக்காவின் முன்னாள் போர்க்குற்ற விவகார நிபுணர் ஸ்டீபன் ராப்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவராகப் பணியாற்றிய ஸ்டீபன் ராப் ஜெனிவாவில் இன்று நடைபெறும், பக்க நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றிய கருத்துக்களை வெளியிடவுள்ளார்.

நௌரு முகாமிலிருந்த இலங்கையர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர்

நௌருவில் அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட மற்றொரு தொகுதி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இன்று சிங்கப்பூர் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவில் முதலீடு செய்வது குறித்த மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா பிரதமர் சிங்கப்பூர் செல்லவுள்ளார். இந்த மாநாடு நாளை நடைபெறவுள்ளது.

அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுக்கவில்லை – கோத்தா

அரசியலுக்கு வருவது தொடர்பாக தாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உதயங்க வீரதுங்கவை விடுவித்தது அனைத்துலக காவல்துறை?

டுபாயில் அனைத்துலக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, விடுதலைச் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை தனது முகநூல் பதிவு ஒன்றில் உதயங்க வீரதுங்கவே வெளியிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல், நல்லிணக்க விவகாரங்களில் சிறிலங்கா மீது அமெரிக்கா அதிருப்தி

பொறுப்புக்கூறல், நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அமெரிக்க தூதுவர் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சாணக்யபுரி மாநாட்டுக்கு சிறிலங்காவுக்கு மாத்திரம் அழைப்பு

வெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள் பங்கேற்கும் ப்ரவசி பாரதீய டிவாஸ் என்ற மாநாட்டுக்கு சார்க் நாடுகளில் சிறிலங்காவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க, இந்திய, பிரித்தானிய நிபுணர்களின் உதவியுடன் தடயவியல் கணக்காய்வு

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக நடத்தப்படவுள்ள தடயவியல் கணக்காய்வுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா  போன்ற நாடுகளில் இருந்து நிபுணர்களின் உதவியைப் பெற சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் கடல்சார் மூலோபாயம்

கடல் ஆதிக்கத்தைக் கொண்டுள்ள நாடு என்ற வகையில் அமெரிக்கா பல்வேறு கடல் சார் நெருக்கடிகளுக்குப் பதிலளித்து வருவதுடன், எமது பாதுகாப்பு அல்லது எமது கூட்டாளி நாடுகளின் நாடுகளின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளிலிருந்து எம்மைப் பாதுகாப்பதுடன் எமது எல்லைகளை நெருங்கக்கூடிய பல்வேறு தொலைதூர புவிசார் அச்சுறுத்தல்களிலிருந்தும் எம்மைப் பாதுகாக்கின்றது.

அமெரிக்காவின் ஜிஎஸ்பி சலுகை இழப்பினால் பெரிய தாக்கம் இல்லை என்கிறது சிறிலங்கா

அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகை இழப்பு சிறிலங்காவின் ஏற்றுமதிகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தாது என்று, சிறிலங்காவின் தேசிய கொள்கைகள், மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.