நாளை மறுநாள் இந்திய துணை குடியரசு தலைவரைச் சந்திக்கிறது தமிழ் அரசுக் கட்சி
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணனை இலங்கை தமிழ் அரசுக் கட்சிப் பிரதிநிதிகள் நாளை மறுநாள் சந்திக்கவுள்ளனர்.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணனை இலங்கை தமிழ் அரசுக் கட்சிப் பிரதிநிதிகள் நாளை மறுநாள் சந்திக்கவுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆராயப்பட்டுள்ள போதும், அவற்றை விடுவிப்பது குறித்த தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதைப் போன்ற ஒரு பெரும் பொருளாதார வீழ்ச்சி மீண்டும் நிகழாமல் தடுக்க, சிறிலங்கா போராடி வருகிறது. நவம்பரில் ஏற்பட்ட ஒரு கொடிய புயலின் பாதிப்புகளுடன், நீடித்த மத்திய கிழக்கு போரும் சேர்ந்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
மின் உற்பத்திக்குத் தேவையான டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், உச்ச பயன்பாட்டு நேரங்களில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த பரப்புரையை தீவிரப்படுத்துமாறும் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ கன்டா (Masato Kanda) இன்று சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவருமான செர்ஜியோ கோர், இன்று காலை சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
எரிபொருள் நெருக்கடியைச் சமாளிப்பதற்காக வீட்டில் இருந்து வேலை செய்யும் திட்டம் அல்லது அரச மற்றும் தனியார் துறை வேலை நாட்களைக் குறைக்கும் திட்டம் குறித்து தீர்மானிக்க இன்று அவசர கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல், நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானிய கடற்படைக் கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர், இன்னமும் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.