மேலும்

பலாலி விமான நிலைய விரிவாக்கம் – இந்திய அதிகாரிகள் குழு இன்று நேரில் ஆராய்கிறது

பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்த ஆய்வுக்காக இந்திய அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு, கிழக்கை இணைக்க அனுமதியோம் – ரவூப் ஹக்கீம்

மூன்று பத்தாண்டுகளாக நீடிக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கு இணைப்பை முன்மொழிந்தால், முஸ்லிம்களுக்கும் தனி மாகாணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம்.

சீபாவில் கையெழுத்திட மறுத்ததால் இந்தியாவே மகிந்தவைத் தோற்கடித்து – விமல் வீரவன்ச

சீபா உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்ததால், சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்க இந்தியா வெளிப்படையாகவும், இரகசியமாகவும், பணியாற்றியதாகத் தெரிவித்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணி்யின் தலைவர் விமல் வீரவன்ச.

கொழும்பில் இன்று மகிந்த அணியினர் பலப்பரீட்சை

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணி இன்று கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளிநாடு செல்வதற்குத் தடைவிதித்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் மின்சார மற்றும் புதுப்பிக்கவல்ல சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளிநாடு செல்வதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தடை விதித்துள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அமைச்சரின் சகோதரர்

சிறிலங்கா துறைமுக அதிகாரசபையின் தலைவரான தம்மிக ரணதுங்க இன்று கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில், ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

முப்படையினரின் பாதுகாப்பில் சிறிலங்காவின் மின்சார நிலையங்கள்

சிறிலங்காவின் அனைத்து மின்சார நிலைய கட்டமைப்புகள் மற்றும் உப மின்நிலையங்களிலும், சிறிலங்காவின் முப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளுக்கு பான் கீ மூன் பாராட்டு

சிறிலங்கா போன்ற நாடுகளின் மனித உரிமைகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உதவியுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு பேச்சுக்களை அடுத்தே துறைமுக நகரத் திட்டத்துக்கு பச்சைக்கொடி – மலிக் சமரவிக்கிரம

வெற்றிகரமாக நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, சீன நிறுவனத்தின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் பச்சைக்கொடி காண்பித்ததாக, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வெள்ளரச மரத்துடன் மற்றொரு புத்தர் சிலை

கிளிநொச்சியில் புதிதாக புத்தர் சிலையுடன் கூடிய  பௌத்த வழிபாட்டு இடம் ஒன்று சிறிலங்கா இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.