மேலும்

முழுக்குடும்பத்தைச் சிறையிலிட்டாலும் அரசியலை விட்டு வெளியேறமாட்டேன் – மகிந்த சூளுரை

தனது முழுக் குடும்பத்தையும் சிறையில் அடைத்தாலும் கூட அரசியலை விட்டு விலகப் போவதில்லை என்று சூளுரைத்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க சிறிலங்காவுக்கு அழைப்பு – ஜப்பான் செல்கிறார் மைத்திரி

ஜப்பானில் வரும் மே மாதம் நடக்கவுள்ள ஜி-7 எனப்படும், அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

லசந்த, ரவிராஜ் படுகொலைகளின் பின்னணியில் மகிந்த, கோத்தா- பொன்சேகா தகவல்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் உள்ளிட்டோரின் படுகொலைகளை மேற்கொண்ட குழுவினருக்குப் பின்னணியில், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச போன்றவர்களே இருந்தனர் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் சரத் பொன்சேகா.

மகிந்தவின் மேடையில் தடுக்கி விழுந்தார் உதய கம்மன்பில

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடக்கும் மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியின், அரச எதிர்ப்புப் பேரணியின் போது, மேடையில் தடுக்கி விழுந்தார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில.

மகிந்த அணியினரின் அரச எதிர்ப்புப் பேரணி ஆரம்பம்

மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியினரின் பேரணி தற்போது கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பேரணியில்  மகிந்த ராஜபக்ச தற்போது இணைந்து கொண்டுள்ளார்.

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 117ஆவது இடம்

உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் சிறிலங்காவுக்கு 117ஆவது இடம் கிடைத்துள்ளது. ஐ.நா அமைப்பாகிய நிலையான அபிவிருத்தித் தீர்வுகளுக்கான வலையமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் 2016 ஆம் ஆண்டுக்கான தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

இராணுவச் சிப்பாயை காட்டுக்குள் உதைத்துக் கொன்றார் கோத்தா – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

கோத்தாபய ராஜபக்ச இராணுவத்தில் பணியாற்றிய போது, இராணுவச் சிப்பாய் ஒருவரின் மரணத்துக்கு காரணமாக இருந்தார் என்று குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் சிறிலங்காவின் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

தன்மீதான தாக்குதலுக்கு உதவிய புலி உறுப்பினரை விடுவிக்கக் கோருகிறார் சரத் பொன்சேகா

தன் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த உதவியவர் என்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி்களின் செயற்பாட்டாளரை விடுவிக்குமாறு அமைச்சர் சரத் பொன்சேகா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆறுமுனைப் போட்டி: யாருக்கு இலாபம்? – ஆர்.மணி

இப்போதுள்ள நிலையே நீடித்தால், வரும் மே 16 ம் தேதி சட்டமன்றத் தேர்தல் தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் முழுக்க, முழுக்க வித்தியாசமான தேர்தல்தான். காரணம், முதல் முறையாக தமிழ் நாடு ஆறுமுனைப் போட்டியை சந்திக்கப் போகிறது.

மீண்டும் மின்தடை ஏற்பட்டால் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவேன் – ரணில் எச்சரிக்கை

நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் இன்னொரு மின்சாரத் தடை ஏற்படுமானால்,  பல உயர் அதிகாரிகள் வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.