மேலும்

கோத்தாவின் இந்திய பயணத்தை சீர்குலைக்கவே பெயர்ப்பலகைககள் அழிப்பு  – மகிந்த

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவின் இந்தியப் பயணத்தை குழப்ப முனையும் ஒரு குழுவினரே,  தென்பகுதியில் தமிழ் மொழியிலான வீதிப் பெயர்ப்பலகைகளை சேதப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலக பிரதானியாக மேஜர் ஜெனரல் எகொடவெல

சிறிலங்கா அதிபர் செயலக தலைமை அதிகாரியாக,சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல  நியமிக்கப்பட்டுள்ளார்.

நிசாந்த சில்வா ஜெனிவாவுக்கு சென்றிருக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்

தங்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட குற்ற விசாரணைத் திணைக்களத்தின் தலைமை ஆய்வாளர் நிசாந்த சில்வா ஜெனிவாவுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறினார் புலனாய்வு அதிகாரி நிசாந்த சில்வா

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டு வந்த சிறிலங்கா காவல்துறை தலைமை ஆய்வாளர் நிசாந்த சில்வா, அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் நியமனம் இன்று நடைபெறாது?

புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனம் மற்றும் அவர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று நடைபெற வாய்ப்புகள் இல்லை என்று அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டேன் – கோத்தா

அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு தான் ஒருபோதும் அடிபணியமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

நாட்டின் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம் தற்போதைய அரசாங்கத்துக்குக் கிடையாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் றிசாத் பதியுதீனின் வாகனம் மீது தாக்குதல்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான றிசாத் பதியுதீன் பயணம் செய்த வாகனம் மீது, புத்தளத்தில் தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது.

கோத்தா – மோடி சந்திப்பில் ‘13’ குறித்துப் பேசப்படாது?

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் நாள் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் பயணத்தின் போது, 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து கலந்துரையாடப்படமாட்டாது என்று தகவல்கள் கூறுகின்றன.

சஜித்தை எதிர்க்கட்சித் தலைவராக முன்மொழியவில்லை – சம்பந்தன்

சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பதற்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்ளுமாறு, ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியதாக  வெளியான செய்திகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.