ஜனவரியில் அனைத்துலக கொடையாளர் மாநாடு – சிறிலங்கா அறிவிப்பு
டிட்வா பேரிடர் மீள்கட்டமைப்புக்காக நிதி திரட்டுவதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், சிறிலங்கா சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்தும் என, நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மீள்கட்டமைப்பு செலவு 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இருப்பினும் துல்லியமான மதிப்பீடு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
மீள்கட்டமைப்பு நிதியைத் திரட்டுவதற்காக ஜனவரியில் ஒரு கொடையாளர் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த அனைத்துலக மாநாடு சிறிலங்காவில் நடைபெறும் என்றும், மேலதிக விபரங்கள் பின்னர் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
