சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் சிறிலங்கா பயணம்
சீனாவின், தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் (Wang Dongming) மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று சிறிலங்காவுக்கு வந்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரிஸ்வி சாலி, பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தில், வாங் டோங்மிங்கை வரவேற்றார்.
சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் பல அதிகாரிகளும் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா வந்துள்ள சீனா தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு துணைத் தலைவர் வாங் டோங்மிங் அதிபர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத் தலைவர்கள் பலரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.


