மேலும்

சிறிலங்காவில் ஜனவரி 2ம் நாள் அதிபர் தேர்தல்?

அதிபர் தேர்தலை வரும் ஜனவரி 2ம் நாள் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் சார்பில் இந்திய அரசு நாளை மேல்முறையீடு

போதைப்பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, கொழும்பு மேல்நீதிமன்றினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களின் சார்பிலும், இந்திய அரசு நாளை சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளது.

மகிந்தவைப் பதவியில் இருந்து நீக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்- காங்கிரஸ் கோரிக்கை

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

எல்லை மீறுகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் – சிறிலங்கா பிரதிநிதி விசனம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயித் ராட் அல் ஹுசேன், எல்லைமீறி வார்த்தைகளை வெளியிட்டுள்ளதாக, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க விசனம் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ‘புதிய பட்டுப்பாதை’ : அனைத்துலக வல்லாதிக்கத்திற்கான சவால்

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளான பூட்டான், சிறிலங்கா மற்றும் நேபாளம் போன்றவற்றில் சீனாவின் செல்வாக்கு கையோங்குவதன் மூலம் இப்பிராந்தியத்தில் சீனா வலுமிக்கதாக மாறிவிடுமோ என இந்தியா அச்சப்படுகின்றது.

சிறிலங்கா வரும் சீன நீர்மூழ்கிகளை அமெரிக்காவும் கண்காணிப்பு

சிறிலங்காவில் சீன நீர்மூழ்கிகள் தரிக்கத் தொடங்கியுள்ளதை இந்திய மற்றும் அமெரிக்கக் கடற்படைகள் எச்சரிக்கையுடன் கண்காணித்து வருவதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

நடுக்கடலில் சிங்கப்பூர் கப்பல் மீட்ட ஏழு தமிழ் அகதிகளைப் பொறுப்பேற்றது பிறேசில்

ஐக்கிய அரபு குடியரசின்  ஜெபல் அலி துறைமுகத்தில் இரண்டு ஆண்டுகளாக தங்கியிருந்த ஏழு இலங்கைத் தமிழ் அகதிகளை பிறேசில் பொறுப்பேற்றுள்ளது.

விராலிமலை ஆசிரமத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

சென்னையில் நாளை நடைபெறவுள்ள கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேற்றிரவு திருச்சி அருகேயுள்ள பிரேமானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.

ஐ.நாவுக்கு சாட்சியமளிப்போரை கண்காணிக்க கிராமங்களில் அலையும் புலனாய்வாளர்கள்

சிறிலங்காவில்  மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, உள்ளூர் விசாரணைகளில் சாட்சியம் அளித்தவர்கள் ஐ.நா மனித உரிமை ஆணயாளர் பணியகம் நடத்தும் விசாரணைகளுக்குச் சாட்சியம் அளிக்க முடியாதவாறு அச்சுறுத்தப்படுவதாக, நீதி மற்றும் சமாதானத்துக்கான அமைப்பின் தலைவர் அருட்தந்தை மங்களராஜன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் கரு ஜெயசூரிய?

அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஐதேகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரு ஜெயசூரிய நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.