சீனாவின் உயர்மட்ட குழு சிறிலங்கா வந்தது
சீனாவின் உயர்மட்ட அரசாங்க பிரதிநிதிகள் குழுவொன்று – மூன்று நாட்கள் பயணமாக இன்று மாலை சிறிலங்காவை வந்தடைந்துள்ளது.
சீனாவின் உயர்மட்ட அரசாங்க பிரதிநிதிகள் குழுவொன்று – மூன்று நாட்கள் பயணமாக இன்று மாலை சிறிலங்காவை வந்தடைந்துள்ளது.
இன்னொரு கட்சிக்குத் தாவிச் சென்று அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று ஐதேகவின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடவுள்ளது.
வரும் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக- நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முழுமையாக ஆதரிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரைக் கோபுரம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், நேற்று திறந்து வைக்கப்பட்டது. கொழும்பில் சீன அரசாங்கத்தின் நிதி உதவியுடன் இந்தக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று, அதன் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அதிபர் தேர்தல் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார். நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் அதிபர் வேட்பாளர் தொடர்பான இழுபறிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று காலை சிறப்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை, கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நடத்தவுள்ளார்.
வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு கட்சி அல்லது வேட்பாளரையும், ஆதரிக்கும் விடயத்தில், தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு அர்த்தமுள்ள வகையில் அதிகாரப்பகிர்வு என்ற விடயமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கரிசனையாக இருக்கும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆர்வத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐதேக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளருக்கு ஜேவிபி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் ஆதரவை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்று ஆலோசனை நடத்தியுள்ளார்.