மேலும்

பிரிவு: செய்திகள்

பிரபாகரனின் செவ்வியுடன் வெளியான புரொன்ட்லைன் இதழ்களை விடுவிக்க ரணில் உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த புரொன்ட்லைன் இதழ்களை விடுவிக்குமாறு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரபாகரனின் செவ்வியுடன் வெளியான புரொன்ட்லைன் இதழ் கொழும்பில் தடுத்து வைப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் செவ்வியை மறுபிரசுரம் செய்திருந்த, இந்தியாவின் புரொன்ட்லைன் சஞ்சிகை சிறிலங்காவில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணை கவனமாக மதிப்பீடு செய்யப்படும்- ஐ.நா

சிறிலங்காவில் பொறுப்புக்கூறும் உள்நாட்டு பொறிமுறை தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா கவனமாக மதிப்பீடு செய்யும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹன் ஹக் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாம்

சிறிலங்காவின் எல்லா மக்களுக்கும் பொறுப்புக்கூறல், நீதி, நல்லிணக்கம், மற்றும் மனிதஉரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதிப்படுத்தும் கடப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் கீத் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பிடிக்குள் சிக்காமல் நழுவினார் மைத்திரி

சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும், சீனாவையோ, இந்தியாவையோ சார்ந்திருக்கப் போவதில்லை என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் புத்தகயவில் வழிபாடு- இன்று காலை நாடு திரும்புவார்

நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று புத்தகயாவுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் கனகசுந்தரசுவாமி காலமானார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி (வயது-67) இன்று மாலை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

சிறிலங்கா – இந்திய உறவு நெருக்கம் சீனாவுக்கு மகிழ்ச்சியாம்

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கம் சீனாவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிக்கையை வெளியிடுவதில் பிரித்தானியா உறுதி

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான, ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பதில், பிரித்தானியா உறுதியாக இருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.

காலதாமதம் குற்றவாளிகள் தப்பிப்பதற்கான காலஅவகாசமாக அமையக் கூடாது – அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்த அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போட ஐ.நா மனித உரிமைகள் பேரவை எடுத்துள்ள முடிவு, அத்தகைய குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்பிவிடுவதற்கு அனுமதிப்பதாக அமையக் கூடாது என்று அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.