போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை சாட்சியப்படுத்த புதிய செயலி அறிமுகம்
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தவும், ஆதாரப்படுத்தவும் வசதியாக கைத்தொலைபேசி செயலி ஒன்று (mobile phone app) நேற்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தவும், ஆதாரப்படுத்தவும் வசதியாக கைத்தொலைபேசி செயலி ஒன்று (mobile phone app) நேற்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழேயே வடக்கில் போதைப்பொருளுக்கு மக்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். இதற்கு சிறிலங்கா இராணுவத்தினரே பொறுப்புக் கூற வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
20ஆவது திருத்தச்சட்டமாக கொண்டு வரப்படவுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமாலை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் யாழ்ப்பாணத்திலும், ஐரோப்பாவிலும் இயங்கும் டான் தொலைக்காட்சியின் பணிப்பாளர் எஸ்.என்.குகநாதன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேறும் குடும்பங்களுக்கு 2000 வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியைப் பெறுவதற்கு, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகளுக்கான கூட்டம் ஒன்று கூட்டப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை முற்றாக ஒழிப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு செயலணி ஒன்று, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படவுள்ளது. சிறிலங்காவின் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இந்த முடிவை எடுத்துள்ளது.
பிரித்தானியாவின் பாதுகாப்புக் கற்கைகளுக்கான ரோயல் கல்லூரியைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் இருப்பவர்கள் கடுமையான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களும், தண்டனை நிலுவையில் உள்ளவர்களுமே தவிர, அரசியல் கைதிகள் அல்ல என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மை நேற்று லண்டனில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.