புலம்பெயர் தமிழருடனான பேச்சுக்களை வெளியில் இருந்து கவனிக்கிறதாம் சிறிலங்கா இராணுவம்
புலம்பெயர் தமிழர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களை வெளியில் இருந்து கவனித்து வருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தமிழர்களுடன் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய பேச்சுக்களை வெளியில் இருந்து கவனித்து வருவதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்துள்ள அதேவேளை, வடக்கிலும் கிழக்கிலும் அதற்கு போதிய ஆதரவு அளிக்கப்படவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக, வெளியான செய்திகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான ஜோன் செனிவிரத்ன மறுத்துள்ளார்.
சிறிலங்காவுக்கான இந்தியப் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணமானது ‘திருப்புமுனையாக’ உள்ள போதிலும் உறுதியாக எதையும் சாதிக்கவில்லை. சிறிலங்காவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து விட்டதாக, அமைச்சரவை பேச்சாளரான, ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
பாரிசில் இருந்து கொழும்பு வந்து கொண்டிருந்த சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம், காற்றழுத்த மாறுபாட்டினால் குலுங்கியதால், விமானப் பணியாளர்கள் ஐந்து பேர் காயமடைந்தனர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜப்பானுக்கான முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளார். இந்தப் பயணத்தின் போது, அவர், ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் பியூமியோ கிஷிடா மற்றும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம், இம்மாதம் 30ஆம் நாளுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும் தெரிவித்துள்ளது.