முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக, முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக, முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சுமார் இரண்டரை அடி நீளமான (30 அங்கும்) வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதாக சிறிலங்கா அரசாங்க பதில் அச்சகர் ஏ.ஜி.பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மகிந்தவினதும் சீனாவினதும் நிலைப்பாடு ஒத்திசைவாகவே காணப்படும் நிலையில், மகிந்த ராஜகபக்சவிற்கு மைத்திரிபால சிறிசேன ஏன் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதித்தார் என்பது இரகசியமாகவே உள்ளது.
அடுத்த பிரதமர் பதவியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனக்குத் தந்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று தெரிவித்துள்ளார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி.
தமிழ் அரசியல்வாதிகள் பலரைப் படுகொலை செய்த முதல்தரக் கொலைகாரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்.
விடுதலைப் புலிகளின் சர்ச்சைக்குரிய முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் கே.பி.எனப்படும் குமரன் பத்மநாதன் குறித்த பரிந்துரைகளை மேற்கொள்வதற்கு அதிபர் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, நேற்று அனுராதபுரவில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலளிப்பதாக கூறியிருந்த போதிலும், நேற்றைய பரப்புரைக் கூட்டத்தில் அனுபற்றி வாய்திறக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று மாலை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அனுராதபுரவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், அழுத்தம் கொடுத்தார் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 150இற்கும் அதிகமான பௌத்த பிக்குகளும் போட்டியில் இறங்கியுள்ளதால், வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதில் தேர்தல்கள் திணைக்களத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.