மேலும்

துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தார் அஜித் டோவல் – கோத்தா குற்றச்சாட்டு

ajit-dhoval-galle-dialouge (1)சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், அழுத்தம் கொடுத்தார் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்தியாவில் பாஜக அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தேன்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்பதே அவரது முதன்மையான கோரிக்கையாக இருந்தது.

எமது அரசாங்கத்திடம் அந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது போலவே, இப்போதைய அரசாங்கத்திடமும், நிச்சயம் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும்.

துறைமுக நகரத் திட்டம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதே அவர் கூறிய காரணம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு கொழும்பு துறைமுக நகரைத் திட்டத்தினால் அச்சுறுத்தல் ஏதும் ஏற்படாது என்று முன்னைய அரசாங்கம் உத்தரவாதம் அளித்தது.

அந்தக் கோரிக்கையை தற்போதைய அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்று எனக்குத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *