யாழ்.மாவட்ட மாணவர்களே பல்கலைக்கழக நுழைவுக்கு அதிகளவில் தகுதி
2015ஆம் ஆண்டு நடந்த க.பொ.த உயர்தரத் தேர்வில், யாழ்.மாவட்ட மாணவர்களே அதிகளவில் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதியைப் பெற்றுள்ளதாக சிறிலங்காவின் தேர்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015ஆம் ஆண்டு நடந்த க.பொ.த உயர்தரத் தேர்வில், யாழ்.மாவட்ட மாணவர்களே அதிகளவில் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதியைப் பெற்றுள்ளதாக சிறிலங்காவின் தேர்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் அரச பணியாளர்கள் நாளொன்றுக்கு வேலை நேரத்தில் இரண்டு மணிநேரம் கைத்தொலைபேசியில் அரட்டையடிப்பதாகவும், இதனால், நாளாந்தம் 1.8 மனித மணித்தியாலங்கள் அரச சேவைகள் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஆண்டு தோறும் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின், 2016ஆம் ஆண்டுக்கான மாநாட்டில் பங்கேற்க, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சுவிற்சர்லாந்து செல்லவுள்ளார். இந்த மாநாடு சுவிற்சர்லாந்தின், டாவோஸ் நகரில் வரும் 20ஆம் நாள் தொடக்கம், 23ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.
43 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா அதிபரைத் தமது நாட்டுக்கு வருமாறு ஜேர்மனி அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
ஜூன் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்றும், பொறுப்புக்கூறல் தொடர்பான உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றும், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் தெரிவித்தார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்தமாதம் ஜேர்மனிக்கான நான்கு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். வரும் பெப்ரவரி 13ஆம் நாள் இந்தப் பயணம் ஆரம்பமாகும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் இன்று கொழும்பில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
ஈராக்கில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை மூடுவதற்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தினால், சிறிலங்கா அமைச்சரவையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் இன்று சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணமாக வரவுள்ளார்.
வடக்கில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூறுவதாக இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.