மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகாரச் செயலர்

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர்  ஒரு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று முற்பகல் சிறிலங்காவை வந்தடைந்தார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியை கைது செய்ய முடியும் – ஹோமகம நீதிவான் எச்சரிக்கை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின், சிறிலங்கா இராணுவத் தளபதியை கைது செய்து அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய முடியும் என்று ஹோமகம நீதிவான் தெரிவித்துள்ளார்.

‘ஒற்றையாட்சி’யில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – சிறிலங்கா அமைச்சர்

ஒற்றையாட்சி விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்றும், புதிய அரசியலமைப்பில் அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

அடுத்தமாத முற்பகுதியில் சிறிலங்கா வருகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த மாத முற்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவுக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி  சுபினே நந்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சீனப் பயணத்தை திடீரென ஒத்திவைத்தார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, அடுத்த வாரம் சீனாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தை திடீரென ஒத்திவைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை – செவ்வாயன்று வாக்கெடுப்பு

நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றும் நடவடிக்கை வரும் 12ஆம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டார் ஹிருணிகா – பிணையில் விடுவிப்பு

கொழும்பில் இன்று காலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹருணிகா பிரேமச்சந்திர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிரகீத் கடத்தல் – மேலும் இரு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைதாகின்றனர்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்கடத்தல் வழக்கில் ஹிருணிகாவைக் கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு

தெமட்டகொடவில் இளைஞர் ஒருவரைக் கடத்திய சம்பபவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவைக் கைது செய்ய, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

தெல்லிப்பழையில் 984 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல்

தெல்லிப்பழைப் பகுதியில்,  இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 984 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு அமைச்சவையில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.