மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆவணங்களை வழங்க மறுக்கும் சிறிலங்கா இராணுவம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான ஆவணங்களை சிறிலங்கா இராணுவம் இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கில் தேசிய பாதுகாப்பு நலனுக்குத் தேவையான காணிகள் விடுவிக்கப்படாது – பாதுகாப்புச் செயலர்

வடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதைத் துரிதப்படுத்துவதற்காக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையிலான குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இரு முக்கிய அனைத்துலக உயர்மட்டப் பிரமுகர்களை எதிர்கொள்ளத் தயாராகிறது சிறிலங்கா

அடுத்தமாதம் முதல் வாரத்தில் இரண்டு அனைத்துலக முக்கிய பிரமுகர்களை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தயாராகி வருகிறது.

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு உதவ ஜப்பானிய நீதிபதி நாளை கொழும்பு வருகிறார்

போர்க்குற்ற விசாரணை தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் செயல்முறைகளுக்கு உதவுவதற்காக, ஜப்பானின் போர்க்குற்ற விசாரணை நீதிபதியான மோட்டூ நுகுசி சிறிலங்கா வரவுள்ளார்.

சுயநிர்ணய உரிமை விவகாரம் – விக்கியின் குற்றச்சாட்டை கூட்டமைப்பு நிராகரிப்பு

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காற்றில் பறக்கவிட்டு விட்டதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்தியிருந்த குற்றச்சாட்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

பரபரப்பான சூழலில் இன்று கிளிநொச்சியில் கூடுகிறது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு

பரபரப்பான அரசியல் சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

அடுத்தமாதம் 5ஆம் நாள் சிறிலங்கா வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா

இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அடுத்தமாதம்  5 ஆம் நாள் சிறிலங்கா வரவுள்ளார்.

சீனப் போர்க்கப்பல்களுடன் வந்த நீர்மூழ்கி எங்கே?- இந்தியா தீவிர தேடுதல்

இந்தியாவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் நுழைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும், சீன நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் இந்தியக் கடற்படையும், விமானப்படையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மகிந்த – பசில் இரகசிய கலந்துரையாடல்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, தனது சகோதரரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவுடன் வாரியப்பொலவில் இரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன காலமானார்

சிறிலங்காவின் காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன சற்று முன்னர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.