மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

இருதரப்பு பேச்சுக்களை அடுத்தே துறைமுக நகரத் திட்டத்துக்கு பச்சைக்கொடி – மலிக் சமரவிக்கிரம

வெற்றிகரமாக நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, சீன நிறுவனத்தின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் பச்சைக்கொடி காண்பித்ததாக, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

பேரணியில் பங்கேற்றால் நாடாளுமன்ற ஆசனம் பறிபோகும் – எஸ்.பி.திசநாயக்க எச்சரிக்கை

கொழும்பு- ஹைட்பார்க் மைதானத்தில் கூட்டு எதிர்க்கட்சியினர் நாளை நடத்தவுள்ள பேரணியில், பங்கேற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது உறுப்புரிமையை இழக்கும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான எஸ்.பி.திசநாயக்க.

சிறிலங்காவுக்கு ஆதரவாக இரண்டு திட்டங்கள்- ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் தெரிவிப்பு

சிறிலங்காவின் அபிவிருத்திக்கு ஆதரவான இரண்டு திட்டங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடுகளைக் கைச்சாதிடவுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின், அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஆணையாளர் நிவென் மிமிகா தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரினார் ரணில்

அண்மைய நாட்களில் ஏற்பட்ட எதிர்பாராத நீண்ட மின்சாரத் தடைகளால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக, சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

தெகிவளை தொடருந்து குண்டுவெடிப்பு வழக்கில் இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை

தெகிவளை தொடருந்து குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கு தலா இரண்டு ஆண்டுகால கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டை என்னிடம் தந்தால் நிர்வகித்துக் காட்டுவேன்- என்கிறார் மகிந்த

தன்னிடம் நாட்டை ஒப்படைத்தால் நிர்வகிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

அனைத்து மின்சார நிலையங்களும் சிறிலங்கா இராணுவத்திடம் ஒப்படைப்பு – மைத்திரி அவசர உத்தரவு

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் உபமின் நிலையங்களில் சிறிலங்கா இராணுவத்தினரை நிறுத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று உத்தரவிட்டுள்ளார்.

யோசித ராஜபக்சவுக்குப் பிணை – வெளிநாடு செல்லத் தடை

நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கடுவெல நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட யோசித ராஜபக்சவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

பேரணியில் பங்கேற்றால் மகிந்தவை கட்சியில் இருந்து நீக்க முடிவு

கூட்டு எதிர்க்கட்சியின் பேரணியில் பங்கேற்றால், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து இடைநிறுத்த சிறிலங்கா அதிபரும், கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீனவர் அத்துமீறல் விவகாரம்- பேச்சுக்களை தன்னிச்சையாக பிற்போட்டது புதுடெல்லி்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இந்த மாதம் நடத்தவிருந்த பேச்சுக்களை இந்திய அரசாங்கம் பிற்போட்டுள்ளது.