மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

மாகாணங்களுடன் அதிகாரங்களைப் பகிரத் தயார்- சிறிலங்கா அதிபர்

ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார் சி்றிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. ஹிக்கடுவவில் இன்று நடந்த முதலமைச்சர்களின் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

லசந்த படுகொலை- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரும் விசாரணைக்கு அழைப்பு

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான பிரதி காவல்துறை மா அதிபர் சந்திரா வகீஸ்டாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

வெளியேற்றினால் புதிய கட்சி விரைவில் உருவாகும்- எச்சரிக்கிறார் மகிந்த

ஹைட் பார்க்கில் நடந்த அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றினால், உடனடியாக புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு வழி வகுக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

போர்வீரர்களை அனைத்துலக சமூகம் விசாரிக்க அனுமதியோம் – சம்பிக்க ரணவக்க

ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தில் இருக்கும் வரையில், எந்தவொரு சூழ்நிலையிலும், போர்வீரர்களை அனைத்துலக சமூகம் விசாரணை செய்ய அனுமதிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மின்மாற்றிகள் வெடிப்பு குறித்து விசாரிக்க நாளை வருகிறது ஜேர்மனி நிபுணர் குழு

பியகம மற்றும் கொட்டகொட உபமின் நிலையங்களில் வழமைக்கு மாறான முறையில்- இரண்டு மின் மாற்றிகள் வெடித்தமை குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஜேர்மனியில் இருந்து நிபுணர்கள் குழுவொன்று நாளை சிறிலங்கா வரவுள்ளது.

க.பொ.த சாதாரணதரத் தேர்வில் முதல் 12 இடங்களுக்குள் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் இல்லை

க.பொ.த சாதாரணதரத் தேர்வு பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், இந்தத் தேர்வில் முதல் 12 இடங்களுக்குள், தமிழ், முஸ்லிம் மாணவர்கள் எவரும் இடம்பெறவில்லை.

மத்தல விமான நிலையம் அருகே சிறிலங்கா படையினரின் சிறப்பு நடவடிக்கை

மத்தல அனைத்துலக விமான நிலையப் பகுதிகளில் நடமாடும் மான்களையும், காட்டெருமைகளையும் விரட்டியடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவத்தினரை ஈடுபடுத்தியுள்ளது.

காலிமுகத்திடல் ஓட்டப் பந்தயத்தில் தடுக்கி விழுந்தார் பிரான்ஸ் தூதுவர்

கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று நடந்த பாரம்பரிய கனொன்போல் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற பி்ரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ, கால் இடறிக் கீழே விழுந்தார்.

அடுத்த அரச எதிர்ப்புப் பேரணி – மகிந்தவுடன் செவ்வாயன்று ஆராயவுள்ள கூட்டு எதிர்க்கட்சிகள்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய, கூட்டு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வரும் செவ்வாய்கிழமை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடவுள்ளனர்.

ஒரேவிதமாக வெடித்த மின்மாற்றிகள் – கிளம்பும் சந்தேகங்கள்

பியகமவில் உள்ள உபமின் நிலையத்தின் மின்மாற்றியில் கடந்தவாரம் ஏற்பட்ட வெடிப்புக்கும், கொட்டுகொட உப மின் நிலைய மின்மாற்றியில் நேற்று ஏற்பட்ட வெடிப்புக்கும் இடையில் ஒற்றுமைகள் காணப்படுவதாக சிறிலங்கா மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.