மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

தமிழ், முஸ்லிம் தலைவர்களிடம் சிங்களத் தலைவர்கள் பாடம் கற்க வேண்டும்- ஞானசார தேரர்

தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து சிங்கள அரசியல் தலைவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர்.

பிரகீத் கடத்தல் விசாரணையை மகிந்த, விமல், ஞானசார தேரர் குழப்புகின்றனர் – சந்தியா

தனது கணவர் காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளை மகிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச, ஞானசார தேரர் ஆகியோர் குழப்பி வருவதாக, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

வெள்ளை யானைகளை கறுப்பு யானைகளாக மாற்றப்போகிறதாம் சிறிலங்கா

முன்னைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வெள்ளை யானை திட்டங்கள், அதிகம் இலாபமீட்டத்தக்கவையாக மாற்றியமைக்கப்படவுள்ளன என்று சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

அனுமான் பாலம் குறித்து இந்தியாவுடன் பேசவில்லை- சிறிலங்கா பிரதமர்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பாக தம்முடன் இந்திய அரசாங்கம் எந்தப் பேச்சுக்களையும் நடத்தவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் விடுவிக்கப்படாது – பாதுகாப்புச் செயலர்

யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

மின்சார நெருக்கடியை தவிர்க்க சம்பூர் அனல்மின் திட்டம் துரிதப்படுத்தப்படும்- சிறிலங்கா அரசாங்கம்

சம்பூர் அனல்மின் திட்டத்தை துரிதப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் முற்படும் என்று சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 05இல் அரசியலமைப்புப் பேரவையின் முதல் கூட்டம்

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, அண்மையில் சிறிலங்கா நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவையின் முதலாவது கூட்டம் வரும் ஏப்ரல் 05 ஆம் நாள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 18 அகதிகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்புகின்றனர்

தமிழ்நாட்டில் தங்கியுள்ள மேலும் 18 தமிழ் அகதிகள் வரும் 28ஆம் திகதி சிறிலங்காவுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அகதிகளை சுயவிருப்பில் மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ், அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் இவர்களைத் தாயகம் அழைத்து வரும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

சிறிலங்காவில் திரவ எரிவாயு மின்உற்பத்தி நிலையம் – உதவத் தயார் என்று கனடா அறிவிப்பு

சிறிலங்காவில் திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு, உதவிகளை வழங்குவதற்கு கனடா முன்வந்துள்ளது.

சுதந்திரக் கட்சியில் முக்கிய பொறுப்புக் கேட்கவில்லை – என்கிறார் கோத்தா

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தனக்கு பொறுப்பு வாய்ந்த பதவி அளிக்கப்பட வேண்டும் என்று கோரியிருப்பதாக வெளியான செய்திகளை சி்றிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மறுத்துள்ளார்.