அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியாவின் ஆதரவைக் கோருகிறார் சம்பந்தன்
ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.


