மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சரத் பொன்சேகாவின் நுழைவிசைவு விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரிப்பு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நுழைவிசைவு விண்ணப்பத்தை அமெரிக்கா இடைநிறுத்தி வைத்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்துக்கு உதவி – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு

போர்க்குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தை மறுசீரமைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு, அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலர் இன்று கொழும்பு வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலராக நியமனம் பெறவுள்ளவரும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகராகப் பணியாற்றுபவருமான தூதுவர் தோமஸ் சானொன் சிறிலங்காவுக்கு இன்று  பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

இந்தியாவிடம் தொடருந்துகள் கொள்வனவு செய்யும் திட்டத்தை இடைநிறுத்தினார் சிறிலங்கா அதிபர்

இந்தியாவில் இருந்து, தொடருந்து இயந்திரங்கள், பெட்டிகள் மற்றும் பேருந்து இயந்திரங்கள், மற்றும் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதற்கு, அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட திட்டத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தி வைத்துள்ளார்.

முற்றுகிறது முறுகல் – சிறப்புத் தூதுவரை கொழும்புக்கு அனுப்புகிறது இந்தியா

பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்ய சிறிலங்கா திட்டமிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னதாக, சிறப்புத் தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்பி வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டமைப்புக்கு வழங்கிய மற்றொரு வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டார் மைத்திரி

யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினரான அங்கஜன் இராமநாதனை சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளார்.

மற்றொரு அமெரிக்க உயர்அதிகாரி அடுத்த வாரம் சிறிலங்கா வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகரான தூதுவர் தோமஸ் சானொன் சிறிலங்காவுக்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.  வரும் 14ஆம் நாள் தொடக்கம், 16ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கொள்கை ஆய்வாளர்கள் குழு சிறிலங்காவில் – பாதுகாப்புச் செயலருடன் பேச்சு

இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதி தலைமையில், முன்னாள் இராணுவ அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள், மற்றும் இராஜதந்திரிகளை உள்ளடக்கிய கொள்கை ஆய்வாளர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

சரத் பொன்சேகா வெளியிட்ட படங்கள் – அதிர்ச்சியில் விஜேதாச ராஜபக்ச

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி குடும்பத்தினரும், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச குடும்பத்தினரும், ஒன்றாக அமெரிக்காவில் சுற்றுலா சென்றதைக் காட்டும் படங்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா.

திடீரென சீனா சென்ற கோத்தா – மகிந்தவும் செல்லத் திட்டம்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சீனாவுக்குத் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.