கொழும்புத் துறைமுகத்தில் பிரித்தானிய நாசகாரி
பிரித்தானிய கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று இன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பிரித்தானியப் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு வந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
பிரித்தானிய கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று இன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் பிரித்தானியப் போர்க்கப்பல் ஒன்று கொழும்பு வந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பான விவகாரம் குறித்துப் பேசப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பாக பொறுப்புக்கூறலின் பூகோள சவால்கள் தொடர்பாக, ஐ.நா பாதுகாப்புச் சபையின் முறைசாரா கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, லெப்.யோசித ராஜபக்ச, சிறிலங்கா கடற்படைச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ், இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படவுளள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில், அனைத்துலகத் தலையீடுகளை நிராகரிக்க முடியாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் என்று ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் கெய்த் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இராச்சியத்தில் அங்கம் வகிக்கும் ஸ்கொட்லாந்தின் சமஸ்டி அரசியலமைப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று லண்டனுக்குப் பயணமானார்.
போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள் முக்கிய பங்காற்றுவதை உறுதிப்படுத்துவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
நான்கு நாள் பயணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருந்த இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா என்ற விமானந்தாங்கிப் போர்க்கப்பலும், ஐஎன்ஸ்எஸ் மைசூர் என்ற நாசகாரி போர்க்கப்பலும், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து நேற்று கூட்டுப் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டன.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்வதற்கு அனுமதி அளிக்க சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்எஸ் விக்கிரமாதித்யா, கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசித்த போது, மேற்கு கடற்பகுதியில் சீனக் கடற்படையின் போர்க்கப்பல்களுடன் சிறிலங்கா கடற்படை போர்ப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.