மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

மற்றொரு கேந்திர நிலையை இழக்கப் போகிறது சிறிலங்கா இராணுவம் – அலறுகிறார் வசந்த பண்டார

இந்திய அரசாங்கத்தின் ஆணையின் பேரில், சிறிலங்கா விமானப்படை வசம் உள்ள பலாலி விமான நிலையத்தை, சிவில் விமான நிலையமாக்க முயற்சிகள் நடப்பதாகவும், அவ்வாறு மாற்றப்பட்டால், சிறிலங்கா இராணுவம் வடக்கில் மற்றொரு கேந்திர நிலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய அமைப்புகளின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.

மகிந்தவைப் பிரதமராக நியமிக்க வேண்டும்- என்கிறார் கோத்தா

நாட்டைக் காப்பாற்றுவதற்கு, சிறிலங்கா அதிபர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.

சிறிலங்கா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரேணை கொண்டு வர முயற்சி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சியில், மகிந்த ராஜபக்ச ஆதரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மகிந்தவிடம் வீட்டுக்குச் சென்றே விசாரணை – ஆணைக்குழு தலைவர் இணக்கம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருப்பிடத்துக்குச் சென்றே விசாரிக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபத்தபென்டி இணக்கம் தெரிவித்துள்ளதாக, சிறிலங்காவின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

கம்போடியாவுக்கு அகதிகளை அனுப்பும் அவுஸ்ரேலியாவின் திட்டம் கடைசி நேரத்தில் பிசுபிசுப்பு

அவுஸ்ரேலியாவினால் புகலிடம் நிராகரிக்கப்பட்ட அகதிகளை நௌருவில் இருந்து கம்போடியாவில் குடியேற்றும் திட்டத்துக்கமைய, முதல் தொகுதி அகதிகளை நொம்பென்னுக்கு அனுப்பும் திட்டம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.

நௌருவில் உள்ள 3 இலங்கையர்கள் உள்ளிட்ட 5 பேர் கம்போடியாவில் குடியேற இணக்கம்

நௌருவில் உள்ள அவுஸ்ரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று இலங்கையர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், கம்போடியாவில் குடியேற்றப்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக, அகதிகளின் சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

மகிந்த, கோத்தாவை விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரை, விசாரணைக்கு வருமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரேன் செல்கிறது சிறிலங்காவின் உயர்மட்ட விசாரணைக்குழு

ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவரும், மகிந்த ராஜபக்சவின் பெறாமகனுமான, உதயங்க வீரதுங்க தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, அரசாங்க மற்றும் காவல்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று உக்ரேனுக்குச் செல்லவுள்ளது.

கொழும்பில் கூட்டமைப்புடனும் முக்கிய பேச்சு நடத்துவார் ஜோன் கெரி

அடுத்தமாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படும், அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சிறிலங்கா அரசாங்கத்துடன் மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றம் எதிர்க்கட்சிகளுடனும் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசிய மாநாட்டில் இருந்து நழுவினார் சிறிலங்கா அதிபர்- உள்நாட்டு நெருக்கடியே காரணம்?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தவாரம் இந்தோனேசியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தைக் கைவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.