சீனா சென்றடைந்தார் ரணில்- 125 மில்லியன் இழப்பீடு குறித்து முக்கிய பேச்சு
மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்று நண்பகல் கொழும்பில் இருந்து புறப்பட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றிரவு சீனத் தலைநகர் பீஜிங் சென்றடைந்தார்.
மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு நேற்று நண்பகல் கொழும்பில் இருந்து புறப்பட்ட சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றிரவு சீனத் தலைநகர் பீஜிங் சென்றடைந்தார்.
உலகளாவிய ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள- பனாமா ஆவணங்களில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் பெயர்களும் உள்ளடங்கியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளை விரிவாக்கிக் கொள்ளவதற்கு சிறிலங்கா எதிர்பார்த்திருப்பதாகவும், சிறிலங்காவில் முதலீடு செய்வதற்காக இன்னும் அதிகளவு சீன முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சீனாவுக்கான மூன்று நாள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், இந்தப் பயணத்தின் போது குறைந்தபட்சம் 10 இருதரப்பு உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் மேலும் பல கப்பல்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் என்று, அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் கட்டளை அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, பல இருதரப்பு உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ள போதிலும், அதுபற்றி சீனா அதுபற்றி மௌனம் காத்து வருகிறது.
அனைத்துலக கடற்பரப்பில் நாடுகடந்த வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கு சிறிலங்கா கடற்படைக்குத் தேவையான கப்பல்கள், விமானங்கள் மற்றும் கருவிகள் கொள்வனவு செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் தாமதித்ததால், பெருந்தொகை இழப்பீட்டை தருமாறும் அல்லாவிட்டால், மேலதிக நிலப்பரப்பை உருவாக்க அனுமதிக்குமாறும் சீன நிறுவனம் கோரியிருக்கிறது.
சீனாவுடன் நடத்தப்படவுள்ள இருதரப்பு பேச்சுக்கள் மூலம். இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, படைஅதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை படுகொலை செய்ததாக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக சத்ஹண்ட என்ற சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.