மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை வழங்குவதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி

சிறிலங்கா இராணுவத்துக்கு குதிரைகளை அன்பளிப்புச் செய்வதில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டுக் கொண்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதிக்க முடியாது – சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், விடுதலைப் புலிகளை நினைவு கூரும் எந்தவொரு முயற்சிக்கும் அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் கொழும்பு பயணம் கடைசி நேரத்தில் ரத்து

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்து ஐந்து நாள் பயணம், கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கும் தூதுவர் பதவி – நல்லாட்சி அரசிலும் இராணுவத்துக்கு முன்னுரிமை

சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக பதவி வகிக்கும், ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களுடன் சாதகமான சந்திப்பு – எரிக் சொல்ஹெய்ம் தகவல்

புலம்பெயர் தமிழர்களுடன் தாம் பேச்சுக்களை நடத்தியிருப்பதாகவும், இந்தப் பேச்சுக்கள் சாதகமான வகையில் அமைந்திருப்பதாகவும், சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நேபாளத்தைத் தாக்கியது பாரிய நிலநடுக்கம் – சிறிலங்கா தூதரகமும் சேதம்

நேபாளத்தை இன்று நண்பகல் மீண்டும் தாக்கிய பாரிய நிலநடுக்கத்தினால் காத்மண்டுவில் உள்ள சிறிலங்கா தூதரகமும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா விடுதலையை வரவேற்கும் இலங்கைத் தமிழ் அரசியல் பிரமுகர்கள்

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து, இலங்கைத் தமிழர் அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், விரைவில் அவர் முதல்வர் பதவியை பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர்.

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவரும் இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு பரிந்துரை

சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலையில் உள்ள பதவியான- இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு, ஆறு பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பலம் பெற்றுள்ள சிறிலங்கா ஆதரவு அணி – தமிழருக்குப் பின்னடைவு

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகள் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தோற்கடிக்கப்பட்டுள்ளதானது, சிறிலங்காவுக்கு நல்ல செய்தி என்று சிறிலங்காவுக்கான கொன்சர்வேட்டிவ் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த அமால் அபேகுணவத்தன தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவில் பணயம் வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்கள் உள்ளிட்ட 103 பேர் மீட்பு

மெக்சிகோவில் ஆட்கடத்தல்காரர்களால் வீடு ஒன்றில் பயணக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்கள் உள்ளிட்ட 103 குடியேற்றவாசிகளை மீட்டுள்ளதாக, மெக்சிகோ காவல்துறை தெரிவித்துள்ளது.