மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

போர்க்குற்றங்கள் குறித்து சிறிலங்கா படை அதிகாரிகளிடம் விசாரணை ஆரம்பம்

இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக சிறிலங்காப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அதிபர் ஆணைக்குழுவினால் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் சிலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா மீதான அனைத்துலக அழுத்தங்கள் தொடர வேண்டும் – அமெரிக்க ஆய்வு மையம் கூறுகிறது

சிறிலங்கா மீதான மனித உரிமை அழுத்தங்கள் தொடரப்பட வேண்டும் என்று கலிபோர்னியாவை தளமாக கொண்ட, அமெரிக்க ஆய்வு மையமான ஓக்லன்ட் நிறுவகம் வெளியிட்டுள்ள விரிவான ஆய்வு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மகிந்தவின் கனவுக்கு ஆப்பு வைத்தார் மைத்திரி

வெற்றிலைச் சின்னத்தில், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை அனுமதிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளுக்கான புதிய தூதுவர்கள் அனுமதிக்காக காத்திருப்பு

இந்தியா உள்ளிட்ட 40 நாடுகளுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். இந்த தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலன்னே வெளியிட்டுள்ளார்.

புதிய தேசிய பாதுகாப்புத் திட்டத்துக்கு வெளிநாட்டு ஆலோசனை – பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் ஆராய்வு

முப்படைகளின் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபரால் வரையப்படும் புதிய தேசிய பாதுகாப்புத் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

விரிவான தேசிய பாதுகாப்புத் திட்டம் வகுக்கப்படுகிறது – படையினர் மத்தியில் மைத்திரி அறிவிப்பு

நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதான- விரிவான தேசிய பாதுகாப்புத் திட்டம் ஒன்றை  சிறிலங்கா அரசாங்கம் வகுக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச்சபைக்கு சம்பந்தன், ராதிகா குமாரசாமி பெயர்கள் பரிந்துரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட 10 பேர் சிறிலங்காவின் அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். கடுமையான விவாதங்களின் பின்னர் இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

புங்குடுதீவில் நடந்தது என்ன?- சட்டபீடாதிபதி தமிழ்மாறன் விளக்கம்

புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்துக்குள்,  தேவையின்றித் தன்னை இழுத்து தனது பெயரைக் கெடுக்க சில அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடாதிபதி வி.ரி.தமிழ்மாறன் கவலை வெளியிட்டுள்ளார்.

சமூக கட்டமைப்பின் சீர்குலைவே யாழ்.வன்முறைகளுக்கு மூலகாரணம் – பேராசிரியர் தயா சோமசுந்தரம்

புங்குடுதீவில் மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதற்கும், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கும், போருக்குப் பின்னர்  ஏற்பட்டுள்ள பாரம்பரிய சமூக நிர்வாக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முறிவே காரணம் என்று பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் – மகிந்த குற்றச்சாட்டு

சிறிலங்காவில் நடந்த ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.