மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

கூட்டமைப்புக்கு எதிராக வடக்கில் புதிய கூட்டணியை உருவாக்க முயற்சி

வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரி அரசின் முடிவினால் சீனா மகிழ்ச்சி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரை விரிவாக்கும் திட்டத்துக்கு சிறிலங்காவின் துற்போதைய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து சீனா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

போட்டியிடாமல் இருப்பது நல்லது – மகிந்தவுக்கு தொலைபேசியில் கூறினார் மைத்திரி?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது நல்லது என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு தொலைபேசி மூலம் தெரிவித்ததாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மைத்திரியை மிரட்டும் மகிந்த – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் புதிய நெருக்கடி

ஊழல் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிப்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் புதிய இழுபறி தோன்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க விசாரணையை தவிர்க்கவே குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைக் கைவிடுவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பான ஆவணங்களை தாம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் கையளித்துள்ளதாக கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிக்கையை மகிந்த சாதகமாக்கிக் கொள்ளலாம் – மேற்குலக நாடுகள் கவலை

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் நாள் தீர்மானிக்கப்பட்டதில், ஐ.நாவின் விசாரணை அறிக்கையும் முக்கிய பங்காற்றியதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இன்று இறுதி முடிவு – அனந்திக்கு வேட்புமனு நிராகரிப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுக்கிடையில் இன்று இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக திடீர் மரணம்

சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரும்,  புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக நேற்று திடீரென மரணமானார்.

மொஸ்கோவுக்கு அழைக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா ரஸ்யாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மைத்திரியின் முடிவினால் மேற்குலக இராஜதந்திரிகள் நிலைகுலைவு – கொழும்பு ஆங்கில வாரஇதழ்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதானது, கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.