ஜி-7 மாநாட்டு பாதுகாப்பு- ஜப்பானின் தீவிரவாத முறியடிப்பு பிரிவு சிறிலங்காவுடன் ஆலோசனை
ஜப்பானின் தீவிரவாத முறியடிப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் அகிரா சுகியாமா சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம், சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியை இவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.







