மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்காவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது பங்களாதேஸ் போர்க்கப்பல்

சிறிலங்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மற்றொரு தொகுதி உதவிப் பொருட்களை, ஏற்றிக் கொண்டு பங்களாதேஸ் கடற்படைக் கப்பல் ஒன்று நேற்றுமாலை கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளது.

தடைவிதித்தது முப்படைத் தளபதிகள் தான் – நழுவுகிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சம்பூர் விவகாரம் தொடர்பாக தாம் உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கவில்லை என்றும், கிழக்கு முதல்வர் பங்கேற்கும் நிகழ்வுகளைப் புறக்கணிக்கும் முடிவை முப்படைகளின் தளபதிகளே எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி.

கிழக்கு முதல்வர் மன்னிப்புக் கோரியதால் தான் தடை நீக்கம் – சிறிலங்கா கடற்படை பேச்சாளர்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் மன்னிப்புக் கோரியதையடுத்தே, கடற்படை முகாம்களுக்குள் நுழைவதற்கு அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் செயற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது – கிழக்கு முதல்வர்

சம்பூர் விவகாரத்தில், அரசாங்கத்தின் தலையீட்டை மதிப்பதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.

வெள்ளம் வடிந்த பின்னர் கூடாரங்களை அனுப்புகிறது சீனா

சிறிலங்காவில் வெள்ளத்தினாலும், நிலச்சரிவினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 மில்லியன் யுவான் (2.28 டொலர்) பெறுமதியான அவசர உதவிப் பொருட்களை விமானம் மூலம் அனுப்பி வைக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. சீனாவின் வர்த்தக அமைச்சு நேற்று இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டது. 

சம்பூர் விவகாரம் – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மீதும் நடவடிக்கை?

சம்பூர் விவகாரத்தைக் கையாண்டது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பணிந்தது சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு – கிழக்கு முதல்வருக்கு எதிரான தடைகள் நீக்கம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்டுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கியுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

லா-நினாவினால் சிறிலங்காவுக்கு அதிக பாதிப்பு வராது – வளிமண்டத் திணைக்கள பணிப்பாளர்

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கடும் வரட்சி மற்றும் கடும் மழை, வெள்ளத்தை ஏற்படுத்திய எல்-நினோ பருவநிலை, முடிவுக் கட்டத்தை எட்டியுள்ள, அதேவேளை, அடுத்து லா-நினா என்ற கடும் குளிரான பருவநிலை மாற்றம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு முதல்வரை முகாம்களுக்குள் அனுமதியோம் – சிறிலங்கா கடற்படைத் தளபதி சூளுரை

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்டை, எந்தவொரு முகாம்களுக்குள்ளேயும், நுழைவதற்கு அனுமதிக்கமாட்டோம். இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கிறோம் என்று, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

பங்களாதேஸ் பிரதமருடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு – டிசெம்பரில் டாக்கா செல்கிறார்

பங்களாதேஸ் தலைநகர் டாக்காவுக்கும், கொழும்புக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.