மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

பாதுகாப்புச் செயலரின் ‘தடை’ உத்தரவால் சிறிலங்கா அரசுக்கு நெருக்கடி

தற்போதைய அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தரவு தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், தனியான பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

சிறிலங்காவுக்கு இரு ரோந்துப் படகுகளை வழங்குகிறது ஜப்பான்

கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு இரண்டு ரோந்துப் படகுகளை வழங்குவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளது.

சிறிலங்காவுக்கு 38 பில்லியன் யென் கடனுதவி வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்காவுக்கு 38 பில்லியன் யென் அதிகாரபூர்வ அபிவிருத்தி உதவிக் கடனை வழங்குவதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது.

சம்பூர் சம்பவம் ஜி-7 மாநாட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்ட நாடகமா? – விசாரணைக்கு உத்தரவு

சம்பூரில் நடந்த சம்பவம், ஜி-7 மாநாட்டை இலக்கு வைத்து, முன்னரே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றா என்பது குறித்து விசாரணை செய்யுமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முப்படைகளின் தளபதிகளிடமும் கோரியுள்ளார்.

கிழக்கு முதல்வர் மீதான தடை தொடரும் – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

சிறிலங்கா கடற்படை அதிகாரியை அவமதித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், நசீர் அகமட் மீது விதிக்கப்பட்டுள்ள கடற்படையின் தடை தொடரும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு மத்தியில் கிழக்கு கடற்படைத் தளபதி கொழும்புக்கு இடமாற்றம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், கடற்படை அதிகாரி ஒருவரைத் திட்டிய விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதியான றியர் அட்மிரல் நீல் ரொசாரியோ கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல் பொறிமுறை குறித்து சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடன் ரணில் ஆலோசனை

போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான பொறிமுறையை அமைப்பது தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று, பாதுகாப்புச்செயலர் மற்றும் சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கு 1.5 மில்லியன் டொலர் வழங்குகிறது சீனா – தாமதமாக வரும் உதவி

சிறிலங்காவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக, 1.5 மில்லியன் டொலரை சீனா வழங்கவுள்ளதாக அந்த நாட்டின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஜி-7 நாடுகளின் தலைவர்களிடம் கோரிக்கை

சிறிலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, ஜி-7 நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜி-7 நாடுகளின் தலைவர்களை இன்று சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் ஜி-7 நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டில் இன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உயர்மட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.