மேலும்

லா-நினாவினால் சிறிலங்காவுக்கு அதிக பாதிப்பு வராது – வளிமண்டத் திணைக்கள பணிப்பாளர்

el-ninoஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கடும் வரட்சி மற்றும் கடும் மழை, வெள்ளத்தை ஏற்படுத்திய எல்-நினோ பருவநிலை, முடிவுக் கட்டத்தை எட்டியுள்ள, அதேவேளை, அடுத்து லா-நினா என்ற கடும் குளிரான பருவநிலை மாற்றம் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த லா-நினா பருவநிலை மாற்றத்தினால், எல்-நினோவைப் போன்று கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும், எனினும் சிறிலங்கா அதிகளவில் பாதிக்கப்படாது என்றும், வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர்  லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

“எல்-நினோ இப்போது முடிவுக் கட்டத்தில் இருக்கிறது. ஜூன்-ஜூலை மாதமளவில் இது இயல்பு நிலைக்கு வரும். அப்போது லா-நினா உருவாகலாம்.

இதுவும், எல்-நினோவைப்போன்று அழிவுகளை ஏற்படுத்தலாம். எனினும், இது சிறிலங்காவுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருக்காது.

லா-நினா, எல்-நினோ ஆகிய இரண்டுமே சமுத்திரத்தின் வெப்பநிலை மாற்றங்களால் தான் உருவாகிறது.

இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் தெற்கு இந்தியப் பெருங்கடலில் உருவான போதும் அவற்றினால், சிறிலங்காவுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, லா-நினாவினால், அத்திலாந்திக் பகுதியில் அதிகளவு சூறாவளிகளும், பிரேசிலில் வரட்சியும், இந்தோனேசியா, இந்தியாவில் கடும் மழையும் ஏற்படக் கூடும் என்று அனைத்துலக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *