மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சீனாவின் ஆதரவு இல்லையென்றால் போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது – சரத் பொன்சேகா

30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுடன் நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சிறிலங்காவுக்கு சீனா வழங்கிய ஆதரவை மறந்து விட முடியாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

வரும் 14ஆம் நாள் இந்தியா செல்கிறார் ரணில் – முக்கிய விவகாரங்கள் குறித்து பேசுவார்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் 14ஆம் நாள் தொடக்கம் 16ஆம் நாள் வரை இந்தியாவுக்கு, தனது முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க செனட்டின் உயர் அதிகாரிகள் சிறிலங்காவில் – அரசதரப்பு, கூட்டமைப்புடன் சந்திப்பு

அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரக் குழுவின் இரண்டு மூத்த அதிகாரிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பேச்சுக்களை நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மைத்திரி கொடுத்த விருந்து

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபருக்கும், புதிதாகத் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா அதிபர் நேற்றிரவு இராப்போசன விருந்தளித்தார்.

சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன், இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு

இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலாநிதி அர்விந்த் குப்தா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பி.எம்.யூ.டி.பஸ்நாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற கணவன் – மனைவி

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 35 ஆண்டுகளுக்குப் பின்னர், கணவனும் மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்கிறார் சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல் தாக்கியே மரணமாகியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை ஆரம்பம் – கொழும்பு வந்தார் ஹமீத் கர்சாய்

சிறிலங்கா இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் இன்று பிற்பகல் கொழும்பு வந்துள்ளார்.

புதிய கூட்டணியை உருவாக்க மகிந்த ஆதரவு அணி முயற்சி – உடைக்க முனைகிறார் மைத்திரி?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடி வருவதாக, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய அதிபர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மூவர் கைதாகின்றனர்

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ள, சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் மூவர் கைது செய்யப்படவுள்ளனர்.