மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அதிபர் தேர்தலில் 13 டம்மி வேட்பாளர்கள் – கண்டுபிடித்தது தேர்தல்கள் ஆணைக்குழு

சிறிலங்கா அதிபர் தேர்தலில், இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், குறைந்தபட்சம் 13 போலி (டம்மி) வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளுடன் இரகசிய உடன்பாடு இல்லை – ரணில்

புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தமிழ்க் கட்சிகளுடன் எந்த இரகசிய உடன்பாட்டையும் எட்டவில்லை என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பின்கதவால் நாடாளுமன்றம் நுழைகிறார்  மைத்திரி?

சிறிலங்கா அதிபர் பதவியில் இருந்து விலகிய பின்னர், அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமன உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழையவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்சிசி உடன்பாட்டுக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியம் – அமெரிக்கா

சிறிலங்கா அரசாங்கத்துடன் கையெழுத்திடப்படும்,  மிலேனியம் சவால்  உடன்பாட்டுக்கு, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட வேண்டியது அவசியம் என்று அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

எம்சிசி உடன்பாடு ஆட்சி மாற்றத்துக்குப் பின் செல்லாது – கம்மன்பில

தற்போதைய அரசாங்கம், இரகசியமான முறையில்,  மிலேனியம் சவால் உடன்பாட்டில் கையெழுத்திட்டாலும், ஆட்சி மாற்றத்துக்குப்  பின்னர் அந்த உடன்பாடு செல்லுபடியற்றதாகவே கருதப்படும் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எம்சிசி உடன்பாட்டை மகாநாயக்கர்களிடம் வெளியிட்டு பகிரங்கப்படுத்துவோம் – பந்துல

மிலேனியம் சவால் உடன்பாட்டில்,  சிறிலங்காவுக்கு எதிரான  பல விடயங்கள் இருப்பதாகவும், இதுதொடர்பான ஆவணங்களை அதிபர் தேர்தலுக்கு முன்னர்,  மகாநாயக்க தேரர்களிடம் கையளித்து, நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப் போவதாகவும், எச்சரித்துள்ளார்  பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன.

அமெரிக்கா இராணுவத்தை சிறிலங்காவுக்குள் நுழைப்பதற்கே எம்சிசி – வாசுதேவ

அமெரிக்க இராணுவத்தை சிறிலங்காவுக்குள் உள்நுழைப்பதே மிலேனியம் சவால் உடன்பாட்டின் பிரதான இலக்கு, என கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார  தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் ஒப்புதலுடனேயே எம்சிசி உடன்பாடு தயாரிப்பு

மிலேனியம் சவால் நிறுவன உடன்பாடு சட்டமா அதிபரின் ஒப்புதலுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எம்சிசி உடன்பாடு தேர்தலுக்கு முன் கையெழுத்திடக் கூடாது- மகிந்த

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக,  எம்சிசி உடன்பாடு உட்பட எந்தவொரு உடன்பாடும், வெளிநாட்டு அரசாங்கத்துடன் அவசரமாக கையெழுத்திடப்படக் கூடாது என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் எம்சிசி உடன்பாடு கைச்சாத்து

வரும் 16ஆம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, மிலேனியம் சவால் நிறுவனத்தின் 480 மில்லியன் டொலர் கொடையைப் பெறுவதற்காக அமெரிக்காவுடன் உடன்பாட்டில் கையெழுத்திடப்படும் என்று, சிறிலங்கா பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.