மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மகிந்தவை எதிர்க்கும் பொதுவேட்பாளர் நானே! – அறிவித்தார் மைத்திரிபால

எதிரணியின் சார்பில் சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து பொது வேட்பாளராக தான் போட்டியிடவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ( 3ம் இணைப்பு)

அலரி மாளிகையில் அவசர கூட்டம் – மகிந்த ராஜபக்ச அழைப்பு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

ஊடகங்களைச் சந்திக்கிறார் மைத்திரிபால – கொழும்பு நகர மண்டபத்தில் குவிந்துள்ள செய்தியாளர்கள்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராகப் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும், மைத்திரிபால சிறிசேன கொழும்பில் சற்றுநேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார்.

மகிந்தவைச் சந்தித்தார் மைத்திரிபால சிறிசேன – கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அவர் இன்று காலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளார்.

சொல்ஹெய்மின் மிரட்டலுக்கு அஞ்சவில்லையாம் சிறிலங்கா

நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஒரு பொய்யர் என்றும், தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஐதேகவுக்கு தாவினார்

சிறிலங்காவை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இன்றுமாலை இணைந்து கொண்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் புதுடெல்லி சென்றனர்- மோடியைச் சந்திக்க ஏற்பாடு

சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பை அடுத்து நேற்று விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் ஐவரையும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவுள்ளார்.

அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு பிரகடனத்தில் ஒப்பமிட்டார் மகிந்த

சிறிலங்காவில் அடுத்த அதிபர் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் கையெழுத்திட்டுள்ளார். (3ம் இணைப்பு)

சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிப்பு – 1.30 மணிக்கு வெளியாகும்

அடுத்த சிறிலங்கா அதிபர் தேர்தல் பற்றிய அறிவிப்பு  இன்று பிற்பகல் 1.30 மணிக்கு  வெளியாகும் என்று, சிறிலங்கா அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். (2ம் இணைப்பு)

சீன கடற்படைத்தள விவகாரம் – நாடாளுமன்றத்திலும் எதிரொலிப்பு

சிறிலங்கா உள்ளிட்ட 18 நாடுகளில் சீனா கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளதாக நமீபிய நாளிதழில் வெளியான செய்தி, சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் நேற்று எதிரொலித்தது.