மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

வடக்கு மாகாணசபையுடன் முரண்படத் தயாரில்லை – என்கிறார் மைத்திரி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனோ அல்லது வட மாகாணசபையுடனோ எவ்விதத்திலும் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் சிறிலங்கா தயாராக இல்லை என்று சிறிலங்கா அதிபர்  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று உதயமாகிறது தேசிய அரசாங்கம் – 30 புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்

மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இன்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவுக்கு மென்போக்கை காட்டும் சிறிலங்கா

இடைநிறுத்தப்பட்ட கொழும்புத் துறைமுக கட்டுமானப் பணியின் ஒரு பகுதியை மீள ஆரம்பிப்பதற்கு, சீன நிறுவனத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் எழுத்து மூலமாக நேற்று அனுமதி அளித்துள்ளது.

கோத்தாவுக்கும் பீல்ட் மார்ஷல் பதவிஉயர்வு வழங்கக் கோருகிறது பொது பலசேனா

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பொது பலசேனவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

மகிந்த அரசில் இருந்த நால்வரின் பெயரில் டுபாய் வங்கியில் 2 பில்லியன் டொலர் பதுக்கல்

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்தவர்களால், 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான கறுப்புப் பணம், டுபாயில் உள்ள வங்கிக் கணக்குகளில் இரகசியமாக வைப்பிலிடப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழில் தேசியகீதம் பாடுவதற்கு அனுமதியோம் – சிங்கள அடிப்படைவாதிகள் போர்க்கொடி

சிறிலங்காவின் அரச தேசிய நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசியகீதத்தை பாடுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று பௌத்தசிங்கள அடிப்படைவாதிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

கொழும்புத் துறைமுக நகர கட்டுமானப் பணியைத் தொடர சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

சிறிலங்கா அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்ட, கொழும்புத் துறைமுக நகர கட்டுமானத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு, சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மகிந்தவை அரசியலுக்கு வர மைத்திரி விடமாட்டாராம் – ஐதேக நம்பிக்கை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், மீண்டும்  அரசியலுக்கு வரமுடியாது என்று, பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஜூனில் சிறிலங்கா வருகிறார்

சிறிலங்கா அரசாங்கத்தின் அழைப்பையேற்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வரும் ஜூன் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

புலம்பெயர் தமிழர்கள், அமைப்புகள் மீதான தடை மீளாய்வு – மங்கள சமரவீர அறிவிப்பு

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லாத- சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.