மேலும்

ஆணைக்குழுவை விட்டு வெளியேறினார் கோத்தா – விசாரணைக்கு 90 நாள் காலஅவகாசம்

gota-protest (1)இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்பாக இன்று காலை முன்னிலையாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் அங்கிருந்து வெளியேறினார்.

இன்று காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்பாக, கோத்தபாய ராஜபக்ச முன்னிலையானார்.

அப்போது, அவரது சட்டவாளர்கள், கோத்தாவிடம் விசாரணை நடத்துவதற்கு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதற்கமைய  அவருக்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு பணியகத்தில் இருந்து கோத்தாபய ராஜபக்ச வெளியேறினார்.

SRI LANKA-POLITICS-RAJAPAKSEGota-out (2)

gota-protest (1)

gota-protest (2)

அங்கிருந்து அவர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குச் சென்றார். அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்சவை அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

அதேவேளை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து கோத்தாபய ராஜபக்ச வெளியேறியதும், அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு பகுதியினர் விஜேராம மாவத்தையில் உள்ள சிறிலங்கா அதிபரின் இல்லம் நோக்கியும், மற்றொரு பிரிவினர் வெலிக்கடைச் சிறைச்சாலை நோக்கியும் பேரணியாகச் சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *