மேலும்

கோத்தாவிடம் விசாரணை – வெளியே தடையை மீறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

gotabhaya-rajapakseமுன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்குச் சமூகமளித்துள்ளார். இன்று காலை சுமார் 9.30 மணியளவில் அவர் ஆணைக்குழுவின் பணயகத்துக்கு வருகை தந்தார்.

அவரிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, அவருக்கு ஆதரவு தெரிவித்து, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டு வருகிறது.

இதில், டலஸ் அழகப்பெரும, காமினி லொக்குகே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.

இதனால், பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்துக்கு முன்பாக உள்ள வீதி மூடப்பட்டுள்ளது.

Gota-suport-demo (1)

Gota-suport-demo (2)

Gota-suport-demo (3)இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்பாக போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதேவேளை, அந்தப் பகுதியில் பெருமளவு கலகத் தடுப்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *