மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிராந்தி ராஜபக்ச, யோசித ராஜபக்ச அடுத்த சில நாட்களுக்குள் கைது?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவையும், மகன் யோசித ராஜபக்சவையும், அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

33 மாணவர்களுடன் நேபாளத்தில் இருந்து திரும்புகிறது சிறிலங்கா விமானப்படை விமானம்

நேபாளத்துக்கு உதவிப் பொருட்களையும், மீட்பு அணியொன்றையும் ஏற்றிச் சென்ற சிறிலங்கா விமானப்படையின் சி-130 விமானம், காத்மண்டுவில் இருந்து 33 மாணவர்களுடன் இன்று கட்டுநாயக்கவுக்குத் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய இராணுவத் தளபதி நாளை சிறிலங்கா வருகிறார்

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக்  நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா இராணுவ தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவின் அழைப்பின் பேரிலேயே,  இந்திய இராணுவ தளபதி கொழும்பு வரவுள்ளார்.

சிறிலங்கா அமைதியை வெற்றி கொள்ளவில்லை – தந்தை செல்வா நினைவுப் பேருரையில் சந்திரிகா

சிறிலங்கா போரில் வெற்றி பெற்ற போதும், அமைதியை இன்னமும் வெற்றி கொள்ளவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

நேபாள நிலஅதிர்வில் மயிரிழையில் உயிர்தப்பிய மட்டக்களப்பு மருத்துவ மாணவி

நேபாளத்தில் நேற்று நிகழ்ந்த பாரிய நிலநடுக்கத்தில், தலைநகர் காத்மண்டுவில் மருத்துவக் கல்வியை மேற்கொண்டு வரும் மட்டக்களப்பைச் சேர்ந்த மாணவி ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்துக்கு 159 பேர் கொண்ட மீட்புக்குழுவை அதிகாலையில் அனுப்பியது சிறிலங்கா

நேற்று நிகழ்ந்த பாரிய நில நடுக்கத்தினால், 1500 பேருக்கு மேலானோர் பலியான நேபாளத்துக்கு, சிறிலங்கா இன்று அதிகாலையில் 159 பேர் கொண்ட மீட்புக் குழுவொன்றை அனுப்பி வைத்துள்ளது.

நேபாளம் செல்கிறது சிறிலங்கா விமானப்படை விமானம் – இலங்கையரை மீட்டு வரும்

நிலநடுக்கத்தினால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் உள்ள இலங்கையர்களை மீட்டு வருவதற்காக சிறிலங்கா விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்று காத்மண்டுவுக்கு செல்லவுள்ளது. நேபாளத்தில் இன்று நிகழ்ந்த மோனமான நிலநடுக்கத்தில், குறைந்தது 1130 பேர் பலியானதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.

உள்நாட்டு விவகாரத்தில் மேற்குலக நாடுகள் தலையிடவில்லை- சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில், எந்தவொரு மேற்குலக சக்தியும் தலையீடு செய்யவில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரியைச் சந்திக்க மறுத்த மகிந்த – பின்னணி அம்பலம்

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகவும், தனது ஆட்சியின் போது, முக்கிய பங்கு வகித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாலேயே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடத்தவிருந்த சந்திப்பை மகிந்த ராஜபக்ச ரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு, நீதி அமைச்சுகள் ஒத்துழைக்கவில்லை – அதிபர் ஆணைக்குழு குற்றச்சாட்டு

காணாமற்போனோர் குறித்த விசாரணைக்கு சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சுக்கள் ஒத்துழைக்கவில்லை என்று சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.