மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

வித்தியா வன்புணர்வு ஒரு அனைத்துலக வியாபார முயற்சி – விடமாட்டோம் என்கிறது அரசாங்கம்

புங்குடுதீவில் மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தி, அந்தக் காட்சிகளை வெளிநாட்டுக்கு விற்கும் முயற்சியே நடந்துள்ளது என்றும், இதுகுறித்து சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன.

ஜெனிவா கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து சிறப்புக்குழு செல்லாது

ஜெனிவாவில் அடுத்தமாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 29வது கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து சிறப்பு பிரதிநிதிகள் குழு அனுப்பப்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுத் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக் குழு ஓகஸ்ட் மாதம் சிறிலங்கா வருகிறது

பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக் குழு, வரும் ஓகஸ்ட் 3ம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நடப்பதை ஜோன் கெரியும், கமரூனுமே தீர்மானிக்கின்றனர் – கெஹலிய ரம்புக்வெல

சிறிலங்காவில் என்ன நடக்க வேண்டும் என்பதை, அதிபர் மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ தீர்மானிப்பதில்லை, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரியுமே தீர்மானிக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

புலிகளை நினைவு கூர்ந்தாராம் விக்னேஸ்வரன் – ஞானசார தேரர் கூறுகிறார்

நீதிமன்றம் விதித்த தடைஉத்தரவை மீறி, விடுதலைப் புலிகளை நினைவுகூர்ந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீது ஏன் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

போதைப்பொருள் வியாபாரிகள், சமூக விரோதிகளை நாடாளுமன்றத்தில் இருந்து அகற்றுவேன் – மைத்திரி

போதைப்பொருள் வியாபாரிகளையும், சமூகத்துக்கு வேண்டாதவர்களையும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்குத் தான் கடமைப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடெங்கிலும் உள்ள பாடசாலைகளில் நாளை வித்தியாவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி

புங்குடுதீவில் கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா சிவலோகநாதனுக்கு நாடெங்கிலும் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும், நாளை காலை ஒரு நிமிட அஞ்சலி செலுத்துமாறு, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் மகிந்த – சீன செய்தி நிறுவனம் தகவல்

சிறிலங்காவில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த தகவலை சீன செய்தி நிறுவனமான சின்ஹூவா வெளியிட்டுள்ளது.

அமெரிக்க விமானப்படை விமானி கொழும்பில் சடலமாக மீட்பு

கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில், அமெரிக்க விமானப்படை விமானி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.