மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சரத் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு ஆலோசகர் பதவி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மூத்த ஆலோசகராக, முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின்  தலைவருமான சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளார்.

அதிபரின் பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டார் மைத்திரி

சிறிலங்காவின் ஆறாவது நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரான மைத்திரிபால சிறிசேன, இன்று தனது கடமைகளை முறைப்படி ஏற்றுக் கொண்டார்.

அமெரிக்கா சொன்னபடி செய்து விட்டேன் – என்கிறார் மகிந்த

அமைதியான முறையில் தேர்தலை நடத்தும்படி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் தன்னிடம் கூறியதாகவும், அதன்படியே செய்து விட்டேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

அனைத்துலக விசாரணைக்கு எவரையும் கையளிக்கமாட்டோம் – புதிய அரசாங்கம்

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக எவரையும், அனைத்துலக சமூகத்திடம் கையளிக்கமாட்டோம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் அமைச்சரவை இன்று நியமனம்

சிறிலங்காவின் புதிய அமைச்சரவையை, அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று நியமிக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தானே தலைவர் என்கிறார் மகிந்த – உடைகிறது சுதந்திரக் கட்சி

சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தனக்கே உள்ளதாகவும், தானே கட்சியின் தலைமைப் பதவியை வகிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

மகிந்தவின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியிடம் சரண்

மகிந்த ராஜபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பணியாற்றிய, 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்றுமாலை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

தேசிய அரசில் பங்குகொள்ள அழைக்கிறார் மைத்திரி

தேசிய அரசாங்கத்தில் இணைந்து  கொள்ள முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்காவின் புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன.

அமெரிக்காவுக்குத் தப்பியோடினார் பசில் ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச, இன்று அதிகாலை தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

திறைசேரி செயலரும் தப்பிச் சென்றார்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில், சர்ச்சைக்குரிய பங்கு வகித்து வந்த திறைசேரியின் செயலர் பி.பி.ஜெயசுந்தர, தேர்தலுக்கு முதல் நாளே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.