சிறிலங்கா பிரதமருடன் தோமஸ் சானொன் சந்தித்துப் பேச்சு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலராக பொறுப்பேற்கவுள்ள தூதுவர் தோமஸ் சானொன் இன்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று மதியம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா பிரதமருடன், சட்டம், ஒழுங்கு அமைசச்சர் அமைச்சர் சாகல இரத்நாயக்கவும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அதேவேளை, இன்று தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள தோமஸ் சானொன், அதற்கு முன்னதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச சந்தித்துப் பேச்சு நடத்துவார்.