மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

வன்னி, மட்டக்களப்பில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டி – ஏனைய இடங்களில் ஐதேகவுடன் கூட்டு

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி, மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளது.

சிறிலங்காவின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுணவர்த்தன இன்று பதவியேற்பு

சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக இன்று பதவியேற்கவுள்ளார் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன. சிறிலங்கா கடற்படைத் தலைமை அதிகாரியாக இருந்த ரவீந்திர விஜேகுணவர்த்தனவை புதிய கடற்படைத் தளபதியாக நியமிப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்திருந்தார்.

மகிந்தவைத் தோற்கடிக்க ஐதேகவுடன் இணைகிறது மைத்திரி ஆதரவு அணி

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்பட்டுள்ளதால் அதிருப்தியடைந்துள்ள, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் ஐதேகவுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளனர்.

சிறிலங்கா கடற்படையின் இரு இரகசிய தடுப்பு முகாம்கள் கண்டுபிடிப்பு

கொழும்பிலும், திருகோணமலையிலும் சிறிலங்கா கடற்படையினரின் இரகசியத் தடுப்பு முகாம்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வேட்புமனுவில் கையெழுத்திட்டார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுவதற்காக இன்றுகாலை வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

மைத்திரி அணி நேற்றிரவு அவசர கூட்டம் – வேட்புமனு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிப்பது குறித்து, நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனசவின் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரசன்ன ரணதுங்கவினால் மகிந்த – மைத்திரி அணிகளிடையே புதிய சர்ச்சை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க நீக்கப்பட்டுள்ளதால் மகிந்த – மைத்திரி ஆதரவுத் தரப்பினரிடையே புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் மகிந்த – வேட்புமனுவில் இரகசியமாக கையெழுத்திட்டாரா?

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் வந்திருந்ததாகவும், இவர் இரகசியமாக வேட்புமனுவில் கையெழுத்திட வந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓகஸ்ட் 5ஆம், 6ஆம் நாள்களில் அஞ்சல் வாக்களிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பு வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம், 6ஆம். நாள்களில் நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

மகிந்தவுக்கு நிபந்தனை விதிக்கவில்லையாம் – குருணாகலவில் தான் போட்டியிடுவாராம்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிபந்தனைகள் எதையும் விதிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த் தெரிவித்துள்ளார்.