மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ராஜபக்ச குடும்பத்தின் வாரிசுக்கும் வேட்புமனு நிராகரிப்பு

ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவுக்கு, எதிர்வருமு ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாய்ப்பளிக்க மறுத்துள்ளது.

குற்றப் பின்னணியால் மறுக்கப்பட்ட வாய்ப்புகள் – களத்தில் இறங்கிய 3 முதலமைச்சர்கள்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஊழல் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் மீறி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிலருக்கு வாய்ப்பளித்துள்ளது.

சிறிலங்கா- சீன கொமாண்டோக்களின் கூட்டுப் பயிற்சி நேற்றுடன் நிறைவு

சிறிலங்கா- சீன கொமாண்டோக்கள் இணைந்து நடத்தி வந்த பட்டுப்பாதை-2015 கூட்டுப் பயிற்சியின் இரண்டாவது கட்டம் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

ஆனந்தசங்கரி கொழும்பில் வேட்புமனு – வடக்கை விட்டு ஓட்டம்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

கொழும்பில் சிறுபான்மை வேட்பாளர்களை ஓரம்கட்டியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை சிறுபான்மையின வேட்பாளர்களுக்கு உரிய இடமளிக்காமல் ஓரம்கட்டியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த மைத்திரியின் சிறப்பு அறிக்கை இன்று வெளிவருமா?

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாடு குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர், சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடுவாரா என்பது தொடர்பில் குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கும் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்து

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கும் புரிந்துணர்வு உடன்பாடு, இன்று காலை அலரி மாளிகையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தயார் – என்கிறார் ரணில்

தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கத் தயாராக இருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சம்பூரில் விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களுக்கே சொந்தம் – சிறிலங்கா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சம்பூர் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்த  பொதுமக்களின் 818 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களுக்கேகே வழங்குமாறு சிறிலங்கா உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளதுடன், சிறிலங்கா முதலீட்டு சபையிடம் இந்த காணிகளை கையேற்றிருந்த கேட்வே இன்டர்ஸ்றீஸ் நிறுவனத்தின் வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது.

வாசுதேவ நாணயக்காரவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஒரே ஒரு ஆசனம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.