மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

லசந்த கொலையுடன் தொடர்புடைய புலனாய்வு அதிகாரிக்கு பிரகீத் கடத்தலுடனும் தொடர்பு

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, இராணுவப் புலனாய்வு அதிகாரியான சார்ஜன்ட் பிரேமானந்த உடலகம, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கிலும் தொடர்புபட்டுள்ளார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பான் கீ மூனிடம் கால அவகாசம் கோரிய சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனிடம் காலஅவகாசம் வழங்குமாறு தாம் கோரியதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளை அனைத்துலக சமூகம் இனி வலியுறுத்தாது – என்கிறது சிறிலங்கா

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் நம்பகமான விசாரணையை நடத்த  வேண்டும் என்று, ஐ.நாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ ஏனைய உலக அமைப்புகளோ, அனைத்துலக சமூகமோ இனிமேல் வலியுறுத்தாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.நாவுடன் இணைந்து அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியத்தை உருவாக்க சிறிலங்கா முயற்சி

சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான பல பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவுள்ளது.

நாளை சிங்கப்பூர் செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்து சமுத்திர கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நாளை சிங்கப்பூருக்குப் பயணமாகவுள்ளார்.

மைத்திரிக்கு எதிரான போர் எச்சரிக்கை விடுத்தவர்களைக் கண்டறிய தீவிர விசாரணை

சிறிலங்கா அதிபருக்கு எதிராக சைபர் போரைத் தொடுத்துள்ளவர்களைக் கண்டறியும் தீவிர விசாரணைகளில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், சிறிலங்கா கணினி அவசர தயார்நிலைக் குழுவும், ஈடுபட்டுள்ளன.

சிறிலங்கா இராணுவத்தின் நீர்க்காகம் போர்ப்பயிற்சியில் 49 வெளிநாட்டுப் படையினர்

சிறிலங்கா இராணுவம் அடுத்தவாரம் நடத்தவுள்ள நீர்க்காகம் போர்ப்பயிற்சியில், 49 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்கவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்தார்.

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை – காலை வாரியது அமெரிக்கா

முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த அமெரிக்கத் தூதுவர் இணங்கிய போதிலும், யாழ்ப்பாணத்தில் மருத்துவ முகாம் நடத்திய அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள், முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகளை நடத்த மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகு கட்டுமானத் தொழிற்சாலை

காரைநகரில் 285 மில்லியன் ரூபா செலவில் படகுக் கட்டுமானத் தொழிற்சாலை ஒன்றை சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சினால் அமைக்கப்படவுள்ளது.