மேலும்

சிறிலங்கா இராணுவத்தின் நீர்க்காகம் போர்ப்பயிற்சியில் 49 வெளிநாட்டுப் படையினர்

Exercise Cormorant Strike VI - 2015’  (3)சிறிலங்கா இராணுவம் அடுத்தவாரம் நடத்தவுள்ள நீர்க்காகம் போர்ப்பயிற்சியில், 49 வெளிநாட்டுப் படையினரும் பங்கேற்கவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

ஆண்டு தோறும் சிறிலங்கா இராணுவம், நடத்தும் நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி நடவடிக்கை வரும் செப்ரெம்பர் 3ஆம் நாள் தொடக்கம், 25ஆம் நாள் வரை கொக்கிளாய் பகுதியில் இடம்பெறவுள்ளது.

இதில் சிறிலங்காவின் 368 கடற்படையினர், 506 விமானப்படையினர், 2500 இராணுவத்தினர் என 3,458 படையினர் பங்கேற்கின்றனர்.

இவர்களுடன், பங்களாதேஸ், சீனா, இந்தியா, ஜப்பான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 49 வெளிநாட்டுப் படையினர் பங்கேற்பாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பாதுகாப்புப் படைகளின் சிறப்பு நடவடிக்கை ஆற்றல்களை வலுப்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *