மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

இந்திய நிறுவனத்துக்கான கொடுப்பனவை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசு

வடக்கிற்கான தொடருந்துப் பாதை புனரமைப்பு பணியில் ஈடுபட்ட இந்திய நிறுவனத்துக்கான கொடுப்பனவை, சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தி வைத்துள்ளது.

அனைத்துலக நாணய நிதியம் மீது சிறிலங்கா விசனம் – வொசிங்டனிடம் முறைப்பாடு

சிறிலங்காவின் பொருளாதாரக் கொள்கை தொடர்பாக அனைத்துலக நாணய நிதியம் வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் சிலவற்றை மூட சிறிலங்கா அரசு திட்டம்

வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் பலவற்றை மூடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அனுமதி பெறாமல் ஜெனிவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாது – சிறிலங்கா அரசு உறுதி

நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறாமல், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ.டி.சில்வா தெரிவித்தார்.

ஐதேக உறுப்பினர் முஜிபுர் ரகுமானை நாடாளுமன்றத்துக்குள் தாக்க முயன்ற எதிர்க்கட்சியினர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உரையாற்றிக் கொண்டிருந்த போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைத் தாக்க முயற்சித்தனர்.

அமெரிக்க குழுவை கடற்படை முகாமுக்குள் அனுமதிப்பதே குற்றம் – என்கிறார் ராஜித சேனாரத்ன

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் அமெரிக்க குழுவை அனுமதிப்பதே தவறு, ஐ.நா.குழுவினரை அனுமதித்ததால் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

காணிகளை விடுவிப்பது குறித்து இராணுவத்துடன் பேச்சு நடத்துகிறதாம் அரசு – ரணில் கூறுகிறார்

வடக்கில் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இராணுவத்துடன் பேச்சு நடத்தி வருவதாகவும், அடுத்த மாதமளவில் மீதமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் மார்ச்சில் நடக்காது

உள்ளூராட்சித் தேர்தல்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் மார்ச் மாதம் நடத்தப்படாது என்னும், எனினும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தடைநீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் – ருவான் விஜேவர்த்தன

அண்மையில் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று சிறிலங்காவின்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

எல்லா தமிழர்களையும் புலிகளாகப் பார்க்கவில்லை – சிறிலங்கா அரசு

தமிழர்களையும் தமிழ் அமைப்புக்களையும் புதிய கோணத்திலேயே தற்போதைய அரசாங்கம் நோக்குகிறது என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.